‘தம்’மொழி கவிதைகள்

*உச்சத்துக்குப் பிந்தைய மெல்லிய முத்தம் போல
புகைத்து முடித்த பிறகு தேவை
ஒரு ஹால்ஸ் மிட்டாய்.

*இன்று ஊதித்தள்ளும் இவன்
ஒருகாலத்தில் கடைமறைவில்அப்பா புகைத்ததை
அம்மாவிடம்போட்டுக்கொடுத்த உத்தமன்.

*எல்லோரும் உறங்கிவிட்ட மேன்சனில்
தனித்து எரிகிற சிகரெட் முனையில்
கனல்வது நெருப்பு மட்டுமல்ல.

*புகைக்கும் நண்பர்கள் கூட என்னோடு
புகைக்கத் தயங்குகிறார்கள்.
நான் ரசித்துப் புகைக்கிறேனாம்.
*கண்களுக்கு மிக அருகில்
நெருப்பைத் தரிசிக்கும் பரவசமும்
சேர்ந்ததுதான் ஒரு தம்.

*என்ன செய்தும்
திரும்பிப் பார்க்காதவளின்
கண்ணெதிரே புகைத்து
ஒழுக்க வேஷம் கலைப்பது
அறியாப் பையனின் கடைசி ஆயுதம்.

*எழுத்தில் என் முதிர்ச்சி தெரியும்.
கைநடுக்கம்

*அறைக்குள் நான் நுழைந்ததும்,
’ரூம் ஸ்பிரே’ அடித்த அலுவலகத் தோழியுடன்
அப்புறம் பேச்சுவார்த்தை குறைந்துபோனது.

வீடு திரும்பியவுடன்
எனக்கும் மனைவிக்குமிடையே
விழும் சிறு இடைவெளி
புகை வாடை போனால்தான் நீங்குகிறது.

பிறந்த குழந்தையை
யாராவது தூக்கச் சொன்னால்
தயக்கம் தடுக்கிறது.

புகைக்கும்போது வருகிற
தொலைபேசி அழைப்புகளை
இப்போதெல்லாம் புறக்கணிக்கிறேன்.

சரிந்து விழுந்த பைக்கை
நிமிர்த்த போராடிய நண்பன்
வாய் விட்டு கத்திய பிறகுதான்
சிகரெட்டை வீசிவிட்டு உதவத் தோன்றியது.

பந்தபாசங்களிலிருந்து விடுபடச் செய்வதில்
சிகரெட்டுக்கும் பங்கு உண்டு.

Advertisements

2 Comments (+add yours?)

 1. santhosh
  Feb 05, 2011 @ 14:24:46

  kalakkuRa machi! Superappu!

  Reply

 2. ப.கலாநிதி
  Feb 08, 2011 @ 13:04:05

  எழுத்தில் முதிர்ச்சி நன்றாகவே தெரிகிறது. சூப்பர் ஆனந்த்!

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: