அப்பா டக்கர்கள் என்போர் யாவர்?

அப்பா டக்கர்கள் – உதாரணங்கள் மூலமான ஒரு வரையறை

நேற்றுவரை காதலியை அவ இவன்னு நண்பர்களிடையே பேசிவிட்டு, அவளைக் கரம் பிடித்த அடுத்த நாளே ’அவங்க இவங்க’ என்று அதே நண்பர்களிடம் பில்டப் பண்ணுபவர்கள், புதிதாக யாராவது வேலைக்கு வந்தால், அவரிடம் தனது சீனியாரிட்டியை காட்டுவதற்காகவே சக ஊழியர்களோடு வழக்கத்துக்கு அதிகமாக ஒட்டி உறவாடுபவர்கள், படம் பார்த்துவிட்டு அது நல்லாருக்கா இல்லையான்னு சொல்லாமல், ஓடும்…ஓடாதுன்னு டிஸ்டிரிபியூட்டர் ரேஞ்சுக்கு ஆருடம் சொல்பவர்கள், ’நேத்து நைட் ஒரு பிரெஞ்சு படம் பார்த்தேன்…தமிழில் எல்லாம் என்னங்க படம் எடுக்குறானுங்க…இவனுங்க சுத்த வேஸ்ட்’ என்று தமிழ் சினிமாவுக்கு எள்ளுத்தண்ணி ஊற்றுபவர்கள், என் பையன் செம புத்திசாலிங்க…ரெண்டு வயசுதான் ஆகுது…அதுக்குள்ள வடிவேலு யார், சந்தானம் யார்ன்னு தெரிஞ்சு வச்சுருக்கான்’ என்று பிள்ளைப்புராணம் பாடிவிட்டு, எதிராளி தங்கள் குழந்தை பற்றி பேச்செடுக்கும்போது ‘டீ ஆறிடப் போகுது சீக்கிரம் குடிங்க’ என்பவர்கள், தங்களின் ஒரு வயதுக்குழந்தையைக் கூட ’அடேங்கப்பா, அவர் இப்பவே என்னமா கோபப்படுறார்?’ என்று தங்களுக்குச் சமமாக தங்கள் சிசுக்களுக்கும் மரியாதை கோரும் விஐபிகள், எதிராளியின் நிதி நிலைமை ஸ்தம்பித்து நிற்பதைப் பொருட்படுத்தாமல் சர்வசாதாரணமாக ’ஒரு ஃப்ளாட் வாங்கிப் போட வேண்டியதுதானடா?’ என்று சொல்லி நக்கல் பார்வை பார்ப்பவர்கள், ‘நெஞ்சுல லேசான வலி’ என்பவர்களை ‘சீக்கிரம் டாக்டரைப் போய்ப்பாருங்க. எங்க மாமா ஒருத்தர் இப்படித்தான் அசால்ட்டா இருந்தார். அப்புறம் பார்த்தா திடீர்ன்னு ஒருநாள் அட்டாக்….’ என்று பீதி ஏற்படுத்துபவர்கள், ஃபேஸ்புக்கில் ’என்பிலதனை வெயில் காயும்’ ரேஞ்சுக்கு கசிந்துருகிவிட்டு, நேரில் சந்தித்தால் பார்க்காததுபோல் முகத்தைத் திருப்பிக்கொள்பவர்கள், அடிக்கடி தங்கள் கருத்து ப்ளஸ் கமெண்ட் ஃபில்லர்களைப் போட்டு நிரப்பியதால்தான் உரையாடல் சுவாரஸ்யமாக நடந்தது என்று நம்புபவர்கள், ஃபேமிலி ஃபங்ஷனில் க்ரூப் போட்டோக்களுக்கு சிக்காமல் நழுவிக்கொண்டே போகும் பையன்களைப் புரிந்துகொள்ளாமல் இழுத்துப்பிடித்து ‘ப்ளஸ் டூ மார்க் என்ன?’ என்று கேட்டு, அட்வைஸ் பண்ணுபவர்கள் ஆகியோரும் அவர்களை ஒத்த இன்ன பிறருமே ’அப்பா டக்கர்கள்’ என்போர் ஆவர்.

………….

மழைத்தூறல்களுக்கு நடுவே ட்ராபிக் குழம்பி சூழலே எரிச்சலில் திளைத்துக் கிடந்தது. முட்டைகோஸும் காலிஃபிளவரும் நிரம்பிய தள்ளுவண்டியை ஓட்டிவந்தவரும் சிக்னலுக்காகக் காத்து நின்றார். காய்கறிகள் மழையில் நனைவதை கவலையுடன் அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டாலும், அவரது செல்போனில் பாட்டு நிற்கவில்லை. ’வளர்ந்த கதை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா’ பாடலின் ரீமிக்ஸ் வடிவம் சாலையோரச் சத்தங்களுக்கு நடுவே துல்லியமாக ஒலித்தது. எளியோரின் பாரங்களை இசையால் குறைக்கும் கலைஞர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள்.
………
‘சர்ச்சைக்குரிய ஈமு கோழி விளம்பரத்தில் நடித்தது ஏன்? ‘ என்ற கேள்விக்கு சத்யராஜின் பதில்:’ஈமு கோழி விளம்பரம், நடிக்க முடியுமான்னு கேட்டாங்க. நடிச்சேன். மற்றபடி அதில் உள்ள தில்லுமுல்லுகள் எனக்குத் தெரியாது’’. சரத் குமார் தரப்பின் பதில்: ’ஈமு கோழி உணவு சத்தானதுன்னுதான் விளம்பரத்தில் சரத் சொல்லுவார். அதன் விற்பனை குறித்தெல்லாம் பேச மாட்டார்.’’

சரத்திடம் எனக்கு பிடித்த அம்சமே, எந்த நிலையிலும் அவர் வெளிப்படுத்தும் இந்தப் புத்திசாலித்தனம்தான்.

……………

ட்ரைவிங் லைசன்ஸ் இல்லாதவர்கள் பகல் நேரத்தில் போலீசிடமிருந்து தப்பிக்க ஒரு சிம்பிள் வழி…சாலையின் இரு பக்கங்களில் நிழல் சூழ்ந்த பக்கம் போகக் கூடாது. கடமை தவறாத காவல் துறை அதிகாரியாக இருந்தாலும் பணிபுரிய நிழல் தேவை.
………..

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: