தற்செயல் தத்துவம்-3

இன்றைய குடும்பங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை, கணவன் செய்யும் காமெடிகளுக்கு மனைவியால் ஈடுகொடுக்க முடிவதில்லை என்பதுதான்.

வேட்டை நாயாக வாழ்வதை விட, தெரு நாயாக வாழ்வதற்குத்தான் அதிக வீரம் தேவைப்படுகிறது. (பங்களா நாய்களைக் கணக்கிலேயே சேர்த்துக்கொள்ளவில்லை)

அடித்துப் பேசி நம் வேதனையை உடனடியாகப் புரிய வைக்க முடியும். எதுவும் பேசாமல் வேதனையை நாள்பட உணரச் செய்யவும் முடியும். இரண்டாம் அணுகுமுறையில் நீதியோடு, ஒரு சந்தோஷமும் கிடைப்பதை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்///என்னா அடி!

சந்தோஷத்திலும் துக்கத்திலும் வார்த்தைகள் அற்றுப்போனவர்களுக்காக ஸ்மைலியைக் கண்டுபிடித்தவன் வாழ்க!

தேடித் தேடி கேட்கும் சோகப்பாடல்கள் சொல்லும் சோகங்கள் நேரில் வந்து நின்றால், தலை தெறிக்க ஓடிவிடுவோம் என்பது அனுபவிக்கும்போதுதான் தெரிகிறது.

ஆபீஸ் மீட்டிங்குக்காக செல்போனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு, மீட்டிங் முடிந்ததும் மறக்காமல் அதை விடுவித்துக்கொள்பவனே சிறந்த குடும்பஸ்தன்.

‘பேரைக் கேட்கும்போதே சும்மா அதிருதில்ல’, ‘சின்ன பசங்களா…யார்கிட்டடா விளையாடுறீங்க?’ போன்ற பஞ்ச் டயலாக்குகளுக்கு சற்றும் குறைவில்லாத இன்னொன்று…’உனக்கே இவ்வளவு அதுப்பு இருந்தா எங்களுக்கு எவ்வளவு அதுப்பு இருக்கும்?’

‘Keep Distance, Advocate Inside’, இப்படி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு காரை மௌண்ட் ரோட்டில் பார்த்தேன். மிரட்டல்கள் பலவிதம்.

அடைக்கும் தாழுடன் கூடிய அன்பு இன்னும் ஈர்க்கிறது.

எத்தனை பேரின் செல்போனில் நாம் குறைந்தபட்சம் ஒரு பெயராகவாவது இருக்கிறோம் என்பதைப் பண்டிகைகள் சொல்லிவிடுகின்றன#wish you happy and bright deepavali!

க்ளார்க் கெண்ட் சூப்பர் மேன் ஆவதற்கு போன் பூத் தேவைப்பட்டது போல, நேற்றைய தினத்திலிருந்து மீண்டு இன்றைய நாளைச் சிரித்த முகத்தோடு எதிர்கொள்ள நிறைய பேருக்குக் குளியலறை பயன்படுகிறது.

நடக்க நடக்க வழி பிறக்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: