நன்றி சார்!

கயத்தாறு மட்டுமல்ல, சுற்றியுள்ள கிராமத்தினருக்கும் மீனாட்சி சுந்தரம் சார் என்றால் தெரியும். கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். அப்பாவி. ஒரு சம்பள தேதியை ஒட்டி, அஞ்சல் அலுவலகத்துக்குப் போனவர் மொத்த சம்பளத்தையும் எப்படியோ தொலைத்துவிட்டு வந்துவிட்டார். அவரது ஏமாளித்தனத்துக்கு இது ஒரு உதாரணம் என்று எனக்குத் தோன்றும். காது கேட்கும் திறன் குறைவு. மாணவர்களை பிரம்பால் அடிக்கும் சூழ்நிலை வந்தால், தன்னையும் மாணவனையும் நொந்துகொண்டேதான் அடிப்பார். அவர் மிகுந்த வேதனையோடு அந்த செயலைச் செய்வது போலிருக்கும். வன்முறையை அவ்வளவாக நாடாத காரணத்தாலேயே, மாணவர்களின் கேலிக்கும் ஆளாவார். ஆனால் மாணவர்களுக்குத் தமிழை மிக அழகாக, பொறுப்பாகக் கற்றுக்கொடுப்பார். எட்டாம் வகுப்பு வரைக்கும் எனக்குத் தமிழ் பாடம் ஒரு பிரச்னையே இல்லை, அதில் நான் ஒரு பிஸ்து என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஒன்பதாம் வகுப்பில் மீனாட்சி சுந்தரம் சாரிடம் தமிழ் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் தமிழில் எவ்வளவு பலவீனமாக இருந்திருக்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது. பெரும்பாலானவர்களுக்குத் தமிழ் இலக்கணம் படிப்பது கசப்பு மாத்திரை சாப்பிடுவது போலத்தான் என்பதை இப்போது பார்க்கிறேன். எனக்கு அது ஒரு சுவையான பாடம். அதை மீனாட்சி சுந்தரம் சார் என் மனதில் கொண்டு வந்து சேர்த்த விதம் அப்படி. இன்று ஊடகத்துறையில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து, தமிழை இயன்றவரை பிழை இல்லாமல் பேசவும் எழுதவும் முடிகிறது என்றால் அது மீனாட்சி சுந்தரம் சாரால் கிடைத்த நற்பேறு.
கயத்தாறுக்குப் போய் வெகு நாட்களாகிவிட்டன. ஓய்வு பெற்று, மனைவி(அவரும் அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தவர்)யையும் இழந்து தனிமையில் வாழ்க்கையை  நடத்திக்கொண்டிருக்கு மீனாட்சி சுந்தரம் சாரை போய் ஒரு முறை பார்க்க வேண்டும்.
மாணவர்களின் அறிவுக்கண்ணைத் திறந்து வைத்து, போகிற போக்கில் அவர்களுடைய வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்துவிடுகிற மீனாட்சி சுந்தரம் சார் போன்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்.

(கடந்த ஆசிரியர் தினம் அன்று முகநூலில் எழுதியது.)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: