ட்ராபிக் தத்துவங்கள்

மழை நாட்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்காத இடத்தில் பயணிக்க பாதசாரிகளோடு போட்டியிடும் வாகன ஓட்டிகளும் இருக்கிறார்கள்.

ஒரு நள்ளிரவில் சைதாப்பேட்டை மறைமலை நகர் பாலம் வழியே சென்றுகொண்டிருந்த என்னை ஒரு பைக் ஆரவாரம் இன்றி முந்திச் சென்றது. தண்டால் எடுக்கும் போஸில் படுத்தபடி அந்த பைக்கை ஒருவர் ஓட்டிப் போய்க்கொண்டிருந்தார். தூரத்தில் புள்ளியாக மறையும் வரை தலைவர் அதே நிலையில்தான் இருந்தார். சாலையில் கிடைக்கும் அதிர்ச்சிகள் பலவிதம்!

பச்சை சிக்னல் மறைந்து சிவப்பு சிக்னல் ஒளிர்வதற்குள் கோட்டைத் தாண்ட வேண்டும் என்ற ஆவேசத்தைக் கட்டுப்படுத்தும்போது ட்ரைவிங் என்பது தியானம் ஆகிறது.

 

ஒருவர் முந்திச் செல்ல நாம் இடம் கொடுப்பதாலும் நாம் முந்திச் செல்ல இன்னொருவர் அனுமதிப்பதாலுமே சாலையில் போக்குவரத்து என்பது சாத்தியம் ஆகிறது.

மனதில் எல் போர்டு மாட்டிக்கொண்டு வண்டி ஓட்டுபவன் அவ்வளவு லேசில் விழ மாட்டான்.

வெறி பிடித்த வேகத்தில் சென்றுகொண்டேயிருக்கும் வாகன ஓட்டிகளை நோக்கிக் கனிவாகச் சிரித்தபடி, பலவீனமாகக் கையை உயர்த்திக்காட்டியபடி சாலையைக் கடந்து சென்று விட முடியும் என்று முதியவர்கள் இன்னும் நம்புகிறார்கள்.

ஒருநாள் காலையில் எதிரில் பைக்கில் வந்தவரைப் பார்த்து ‘லைட் எரியுது. ஆஃப் பண்ணுங்க’ என்று சைகை காட்டினேன். பதிலுக்கு அவரும் அதே மாதிரி சைகை காட்டினார். என் பைக்கிலும் லைட் எரிந்தது. நல்ல வேளை, தெரிந்தவர்கள் யாரும் அருகில் இல்லை.

என்னதான் சோடியம் விளக்குகள் ஒளியை வாரி இறைத்தாலும், இரவு என்பது இருளே ஆதிக்கம் செலுத்தும் பொழுது என்பது பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு ஏன் இன்னும் புரியவில்லை?

விரைந்து செல்லும் வாகனங்களின் வேகம் சில நொடிகள் குறைகிறது ஃபைபர் கண்ணாடிச்சில்லுகள் கொட்டிக்கிடக்கும் இடத்தைக் கடக்கும்போது.

பச்சை சிக்னல் விழுந்தும் வண்டியைக் கிளப்பாமல் ஒரு கூட்டமாக ஙேன்னு வாய் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு தனி அனுபவம்.

எங்களுக்கான சிக்னல் விழும்போது நீங்கள் சாலையைக் கடக்கிறீர்கள். உங்களுக்கான சிக்னல் விழும்போது நாங்கள் கடப்போம். விதிமுறை மீறல் என்பதே சில இடங்களில் விதிமுறை போல.

அலுவலகத்திற்கு போகும் காலை நேரங்களில் காட்டும் அதே வேகத்தை வீட்டுக்குப் போகும் மாலை நேரங்களிலும் காட்டும் வாகன ஓட்டிகள் சென்னை சாலைகளின் மாபெரும் சவால்.

நம்மை நாமே வழிநடத்திக்கொள்ள முடியுமா என்பதை ஆளற்ற சிக்னல்கள் உணர்த்திவிடுகின்றன.

சென்றடைய வேண்டிய இலக்கை விட, கடந்து செல்லும் பாதையில் மனதை வைத்தால் பயணத்தின் பதற்றம் குறைகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: