பூம் மைக் படும் பாடு

ரௌத்ரம் பழகு நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்காக வெவ்வேறு பொது இடங்களுக்குச் சென்று வருகிறோம். கேமரா, ட்ரை பாட், தெர்மகோல் சகிதம் சம்பந்தப்பட்ட இடங்களுக்குப் போய் இறங்கும்போது, பெரும்பாலானவர்கள் அந்தச் சூழலில் எங்களைக் கொஞ்சம் வித்யாசமானவர்களாகத்தான் பார்ப்பார்கள். கேமராவை விட அவர்கள் பார்த்து ஆச்சர்யப்படுகிற ஒரு பொருள் படப்பிடிப்பின் போது ஒலியை உள்வாங்குவதற்கான Boom Mike. இது பரபரப்பான இடங்களில் கேட்கும் கலவையான ஒலிகளைக் கூட மிகக் கூர்மையாகப் பதிவு செய்யக்கூடியது. ஒரே நேரத்தில் ஐந்தாறு பேர் இதன் மூலம் பேச முடியும். ஒவ்வொருவரும் தனித்தனியாக காலர் மைக் அணிய வேண்டிய அவசியம் இல்லை. பேசுபவரின் தலைக்கு மேலே இந்த மைக்கின் ஸ்டிக்கைத் தூக்கிப்பிடித்து, அதே சமயம் கேமராவிலும் பதிவாகாதபடி, பேச்சையோ ஒலிகளையோ பதிவு செய்வது சவுண்ட் டெக்னிஷியன்களுக்கே உரிய தனிக்கலை.

இந்த மைக் காஷ்மீர் குல்லாக்களிலிருந்து துணி எடுத்து தைத்தது போல பார்க்க புசுபுசுவென இருக்கும். பள்ளி மாணவர்கள் அதைப் பார்த்தால், ‘என்னண்ணே நாய்க்குட்டி மாதிரி இருக்கு?’ என்று ஆச்சர்யப்படுவார்கள். கிண்டலடிக்கவும் செய்வார்கள். பெரும்பாலானவர்களுக்கு இந்த Boom Mike ஏதோ ஒரு விதத்தில் பொமரேனியன் நாய்க்குட்டியைத்தான் நினைவுப்படுத்தி நான் பார்த்திருக்கிறேன்.

நேற்று பாரீஸ் கார்னர் பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு படப்பிடிப்புக்காகப் போயிருந்தபோது கிடைத்த அனுபவம் வேறு. ‘இங்கே என்ன பிரச்னை?’ என்று சில போலீஸ்காரர்கள் அடிக்கடி வந்து எங்களை விசாரித்தபடி இருந்தார்கள். அவர்களில் ஒருவர் எங்களை ஏற இறங்கப் பார்த்தார். வழக்கம்போல Boom Mike பற்றி கேட்கப்போகிறார் என்று நினைத்தேன். அவரோ மைக்கிலிருந்து கழற்றப்பட்ட ஸ்டிக்கைப் பார்த்து, ‘இதென்ன மண்டைல அடிக்குற மாதிரி இருக்கு?’ என்றார். கறுப்பு நிறத்தில் வழவழவென இருக்கும் ஸ்டிக் அவருக்கு லத்தியை ஞாபகப்படுத்திவிட்டதுபோல. அவரவர் வாழ்க்கைக்கும் சூழலுக்கும் ஏற்ப ஆச்சர்யங்கள்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: