தற்செயல் தத்துவம்-4

சில  சமயங்களில் நாம் செய்கிற ஒரு பெருந்தவறு  நல்ல மனிதர்களைச்  சந்திக்கும் வாய்ப்பைத் தந்துவிட்டுச் செல்கிறது.

…………….

இசை, எழுத்து, சமையல், காதல்  எல்லாவற்றுக்கும்  பொருந்தக்கூடிய  ஓர் அடிப்படை  விதி, எங்கே நாம் நம்மை நிறுத்திவிட  வேண்டும்  என்பதுதான்.

…………….

என்னைப்போல மறதி  உள்ளவர்களுக்கு//செல்போன், புத்தகம், பேக், குடை…எதுவானாலும் இந்த இடத்தில் நாம் இதை மறந்துவிட்டுச் சென்றுவிடுவோமோ என்று ஒருநொடி எச்சரிக்கை  நம் மனதில்  ஒலிக்கும்போதே, அந்தப் பொருளை நாம் கையில் எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும். அதைச் செய்யாமல் அங்கேயே அரைமணிநேரம் கதையளந்துகொண்டிருந்தால் நிச்சயம்  அதை  அங்கே  விட்டுவிட்டுத்தான்  வருவோம். மனம் மறதிக்கு நடுவே நமக்கு ஒருவாய்ப்பை அளிக்கிறது. அதை  உணர்ந்து தப்பித்துக்கொள்ள வேண்டும். மிகவும்  எளிய  உண்மை. ஆனால் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால் பல இடங்களில் கஷ்டப்பட்டிருக்கிறேன். அதுவும் நேற்று கோடம்பாக்கம் காபிரெஸ்டாரண்ட்ல என்ன  நடந்ததுன்னா….?!

………

இத்தனூண்டு  கவரைக்  கிழித்து ஹால்ஸ்  மிட்டாயை எடுத்து வாயில் இடுவதற்குக் கூட பதற்றமில்லாத மனம் வேண்டும்.

…………

நேற்று வெகு தூரம் நடந்தேன். தூரத்தை விட, அவ்வளவு தூரம் நடந்திருக்கிறோமே என்ற மலைப்பே களைப்படைய வைத்தது.

………..

சமையலறையில்  தென்பட்ட பூரானை  அடித்துக்கொன்ற பிறகு தோன்றியது, என் முன்னால் இறந்துகிடப்பது ஒரு பெரும் சாபத்துக்குள்ளான ட்ராகன் என்பது.

……….

பூங்காவில் ஒருவர் ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே நடக்கிறார். எல்லோருக்கும் இசை கேட்கும்படி செல்போனைக் கையில் வைத்துள்ள ஒருவர் ஸ்டேஷனுக்குள் நுழையும் ரயில்போல நடக்கிறார். இரு மாமிகள் வீட்டு சங்கதிகளை உரக்கப் பேசியபடியே நடக்கிறார்கள். இன்னொருவர் பின்னோக்கி நடக்கிறார். வேறொருவர் பாம்பு போல வளைந்து வளைந்து நடக்கிறார். நடைப்பயிற்சி கசப்பான மருந்துபோல. அதை விழுங்க கூடுதலாக ஏதேனும் ஒன்று எல்லோருக்கும் தேவைப்படுகிறது.

Advertisements

Aside

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: