பூக்காரம்மாவும் அஷ்டலட்சுமியும்

’அம்மா, அஷ்டலட்சுமி கோயிலுக்கு எப்படி போகணும்?’- பெசண்ட்நகர்லரோட்டோரமாபூக்கட்டிட்டிருந்தஒருஅம்மாகிட்டகேட்டோம். மேஒண்ணாம்தேதி. இரவுஒன்பதுமணிஇருக்கும். அந்தஅம்மாசிலநொடிகள்கூர்மையாஎங்களப்பார்த்துச்சு. தனக்குப்பக்கத்துலநின்னுக்கிட்டிருந்தஇன்னொருஅம்மாவையும்பார்த்துஒருலுக்விட்டுச்சு. கால்டாக்ஸிக்குள்ளஇருந்தஎங்களுக்குக்குழப்பம். வழிதானேகேட்டோம். அதுக்குஏன்இவ்வளவு pause விடுதுன்னு. ’நேரேபோயிஇடதுபக்கமாபோங்க’ன்னுஅந்தம்மாஒருமுறைப்போடசொல்லிக்கிட்டு, ‘சாயங்காலத்துலர்ந்துநூறுபேருக்குஇப்படிகையகாட்டிவழிசொல்லிருப்பேன். நான்கையகாட்டுறதா, பூக்கட்டுறதா? வழிசொல்லிவழிசொல்லியேஎன்பொழுதுபோய்ரும்போல’ ன்னுதொடர்ந்துபுலம்பஆரம்பிச்சிருச்சு. எங்களுக்குச்சிரிப்பும்வந்துச்சு. வருத்தமாவும்இருந்துச்சு. கொஞ்சநேரம்காருக்குள்ளபேச்சேஇல்ல. ‘கையக்காட்டிஏன்வழிசொல்லணும்? இங்கனஇருக்குன்னுசொல்லிமுடிச்சிரவேண்டியதுதானே?’ன்னுடாக்ஸிடிரைவர்சொன்னார். அவருக்குஇதெல்லாம்சாதாரணம்போல. 

‘கோயிலுக்குத்தானேவழிசொல்லுது. புண்ணியம்னுநினைச்சுக்கவேண்டியதுதானே?’ன்னுஎனக்குமுதல்லதோணுச்சு. ஆனாநமக்குப்புண்ணியம்னுதோணுறவிஷயம்மத்தவங்களுக்கும்அப்படிதோணனுமாஎன்ன? அந்தம்மாசின்னவிஷயத்துக்குஅலட்டிக்கிடுதுன்னுஎன்னாலசொல்லமுடியல. அன்னிக்குவிடுமுறைநாள். அந்தபிளாட்பார்ம்லவேறயாரும்கடைபோட்டிருக்கலநிறையபேர்கோயிலுக்குவந்துருப்பாங்க. இந்தம்மாமட்டும்தான்பூக்கட்டிட்டிருந்துச்சு. கிட்டத்தட்டகோயிலுக்குத்திரும்புறரோட்டின்முக்குலஇந்தம்மாஇருக்காங்க. இயல்பாஇவங்ககிட்டதான்எல்லாரும்வண்டியநிறுத்திவழிகேட்டாகணும். இவங்களும் ’கையகாட்டி’ ரொம்பசின்சியராதான்வழிசொல்லிட்டுஇருந்திருக்காங்க. போகப்போகஅவங்களுக்குஅதுஅலுப்பைக்கொடுத்திருச்சு. ஆனாவழிகேட்குறஎங்களைமாதிரிஆட்களுக்குஇதுதெரியாதே. பூக்காரம்மாஅஷ்டலட்சுமிகோயிலுக்குநூறாவதுமுறையாவழிசொல்லுதுன்னு. 

இத்தனைக்கும்பூக்கட்டுறஇவங்களோடதொழிலுக்குஅஷ்டலட்சுமியோடபங்களிப்பும்அவசியமாதான்இருக்கு. கோயிலுக்குவர்றவங்கஇந்தம்மாகிட்டயும்பூவாங்கிட்டுபோவாங்க. அதனாலதனக்குவருமானம்தேடிக்கொடுக்குறஅஷ்டலட்சுமிக்குஇவங்கநன்றிசெலுத்துறஒருவிஷயமாகூடவழிசொல்றதைவச்சுக்கலாம். ஆனாஅந்தம்மாவைஇப்படிநாமகட்டாயப்படுத்தமுடியாது. அவங்களுக்கும்அஷ்டலட்சுமிக்குமானஉறவுஎப்படிஇருக்கோ?

ஒருமுறைமயிலாப்பூர்லஇருக்குறராமகிருஷ்ணாமிஷன்விவேகானந்தாகல்லூரிக்குஎதிர்லநின்னுட்டிருந்தேன். நான்நின்னகால்மணிநேரத்துலமூணுபேர்அடுத்தடுத்துவந்துசிலஇடங்களுக்குவழிகேட்டாங்க. மூடுஅவுட்மனநிலைலஇருந்தநேரம். இப்படியார்யாரோவந்துவழிகேட்டதுஅந்தமனநிலைலலேசாகீறிவிட்டமாதிரிஇருந்துச்சு. சம்பந்தமேஇல்லாமசட்டுன்னுஎன்வேலையேமாறுனதுபோலஉணர்ந்தேன். யோசிச்சுப்பார்த்தாசிவசாமிரோடுஅந்தகல்லூரிக்குமுன்னாலமூணாபிரியுது. அங்கேநான்நின்னுட்டிருக்கேன். அந்தவழியாபோறவங்கஅட்ரஸ்விசாரிக்கஅதுவசதியானஇடம். அந்தஇடத்தைவிட்டுஉடனேகிளம்பிட்டேன்.

எங்கஆபீஸ்கிண்டிஇண்டஸ்ட்ரியல்எஸ்டேட்லஇருக்கு. ஆபீசுக்குஎதிர்த்தாப்லஇருக்குறடீக்கடைலபத்துநிமிஷம்நின்னா, யாராவதுஒருத்தராவாதுஎதாவதுஒருசின்னஃபேக்டரிக்குவழிகேட்டுநிப்பாங்க. கடையநடத்துறஅக்காவும்அண்ணனும்டீகேக்குறஎங்ககிட்டடென்ஷன்ஆனாலும்வழிகேட்குறஆளுங்ககிட்டடென்ஷன்ஆனதில்ல. டோர்நம்பர்மட்டும்சரியாசொல்லணும். 15 வருஷமாஅங்கேகடைநடத்துறதங்களோடஅனுபவத்தைவச்சுக்கிட்டு, துல்லியமாவழிசொல்லிருவாங்க. ஒருநாளைக்குக்குறைஞ்சதுஇருபதுபேராவதுஇப்படிவந்துவழிகேட்பாங்க. இந்தடீக்கடைதம்பதிபொறுமையாஅட்ரஸ்சொல்லிட்டேதான்இருக்காங்க. அதுஅந்தஇடத்தோடதன்மைஅல்லதுதேவைன்னுஅவங்கஏதோஒருவிதத்துலபுரிஞ்சுவச்சிருக்காங்க. பூக்காரம்மாவுக்குஅந்தபுரிதல்இல்லபோல. வயசும்அதிகம். பொறுமைஒருவிதத்துலகூடிட்டிருக்கும்னா, இன்னொருவிதத்துலபொறுமைகாலிஆகிட்டிருக்கும்.

பூக்காரம்மாவுக்குமூணுசாய்ஸ்இருக்கு. அஷ்டலட்சுமிகோயிலுக்குசந்தோஷமாவழிசொல்லலாம். அல்லதுஅலுத்துக்கிட்டேவழிசொல்லலாம். மூணாவதுசாய்ஸ், கொஞ்சம்தள்ளிவேறஎங்காயாவதுஉட்கார்ந்துபூக்கட்டலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: