மொட்டைமாடிக்கு  வந்த புலி

தற்போது நாங்கள்இருக்கும்வாடகைவீட்டில்எனக்குப்பிடித்தஒருவிஷயம், சமையலறையின்சன்னல்வழியேபார்த்தால்தெரிகிறஅகன்றமொட்டைமாடி. நாங்கள்இருப்பதுஓர்அடுக்ககத்தின்இரண்டாம்தளத்தில். இந்தமொட்டைமாடிபின்வீட்டின்முதல்தளத்துக்குரியது. இப்படிஒருசன்னலும்மொட்டைமாடியும்எதிரெதிரேஇருப்பதில்கிடைக்கும்வசதிகளைஎளிதில்யூகித்துவிடலாம். நல்லகாற்றோட்டம்இருக்கும். சிலசமயங்களில்எரிவாயுஅடுப்பின்நெருப்புஅணைந்துபோகுமளவுக்குக்காற்றடிக்கும். காலைஎழுந்தவுடன்சன்னல்கதவைத்திறப்பதுஅந்தநாளைத்திறக்கும்ஓர்உணர்வைக்கொடுக்கும். சன்னலுக்குவெளியேநீலவானமோ, மஞ்சள்மொழிபேசும்சூரியனோகாத்திருக்கும். என்மனைவிதான்இந்தவீட்டைமுதலில்பார்த்தாள். ஒன்றரைவருடத்துக்குமுன்னால்வீடுபார்க்கஎன்னைஅவள்அழைத்துவந்தபோது, சமையலறைக்குள்நுழைந்தவுடன்நான்உணர்ந்தஆசுவாசம்எனக்குஞாபகம்இருக்கிறது. பால்காய்ச்சுஅன்றைக்குசமையலறையில்விழுந்தமெல்லியசூரியவெளிச்சத்தில்அவளைநிற்கவைத்துசெல்போனில்புகைப்படம்எடுத்ததும்கூட.

சன்னலுக்குவெளியேகாகங்களும்புறாக்களும்நடமாடும். நண்பகல்தோறும்ஓர்காகம்வந்துதோசையோசோறோசாப்பிட்டுச்செல்லும். முழுதாகச்சாத்தமுடியாதகதவுவழியே, இரவில்ஓர்எலிவரும். சற்றுஉயரத்தில்அமைந்தசன்னல்வழியாகமொட்டைமாடியைப்பார்த்தால், சிலசமயங்களில்பால்கனிஇருக்கையிலிருந்துபடம்பார்ப்பதுபோலிருக்கும். அவ்வப்போதுதுணிகளைக்காயப்போடஅந்தவீட்டிலிருந்துஒருபையன்மொட்டைமாடிக்குவருவான். என்மனைவிஅவனைப்பார்த்தால் ’நம்மசக்திமாதிரியேஇருக்கான்ல’ என்றுதாம்பரத்தில்இருக்கும்தன்தம்பியைநினைவுகூர்வாள். ஒருஅம்மாகூழ்வத்தல்போடவோ, பருப்பு, மிளகாய்வற்றல்மாதிரிபொருட்களைக்காயப்போடவோவருவார். 

ஒருஞாயிற்றுக்கிழமைநண்பகல். வெயில்பொளேர்என்றுஅடித்துக்கொண்டிருந்தது. சமையலறையிலிருந்துஎன்மனைவிஎன்னைஅவசரதொனியில்கூப்பிட்டாள், ‘ஏங்க..இங்கேவந்துபாருங்க.. புலி.’ ஏதோவிளையாட்டுகாட்டுகிறாள்என்பதுபுரிந்தது. அவளருகேபோனேன். சிரித்துக்கொண்டேசன்னலுக்குவெளியேகைகாட்டினாள். ஒருபுலிஎங்களுக்குமுதுகைக்காட்டிக்கொண்டுஉட்கார்ந்திருந்தது. எத்தனையோகார்களின்பின்னிருக்கையைஅலங்கரிக்கும்பஞ்சுப்புலிபொம்மைதான். சம்பந்தமேஇல்லாமல்ஒருமொட்டைமாடியில்அதுஇருப்பது, ஒருநொடிஅதைப்புலியாகவேஎன்னைப்பார்க்கவைத்தது. வாழ்க்கையின்எதிர்பாராததருணங்கள்மேல்எனக்குஅவ்வளவுநம்பிக்கையோஎன்னவோ? 

ஞாயிற்றுக்கிழமைஎன்பதுமெத்தைகளும்சோபாக்களும்வெயிலில்காய்கிறநாள். அன்றுஇந்தபுலிபொம்மைவந்திருக்கிறது. சிவப்புஓடுகள்பதிக்கப்பட்டமொட்டைமாடியின்தரை, அவ்வளவுபெரியஇடத்தில்புலிமட்டும்இருப்பது, இதற்காகவேசெட்பண்ணிவைத்ததுபோன்றசூரியஒளிமூன்றும்சேர்ந்துஎங்களுக்குஓர்அரியகாட்சியைஉருவாக்கித்தந்துவிட்டன. 

பரவசத்துக்கும்துயரத்துக்கும்ஒரேநேரத்தில்ஆட்பட்டதுபோலஉணர்ந்தேன். என்னிடம்கேமராவும்புகைப்படக்கலைஅறிவும்இல்லாததுகுறித்துநான்மிகுந்தவருத்தமடைந்தநாள்அது. மொட்டைமாடியில்ஜம்மென்றுஉட்கார்ந்திருக்கும்புலியைப்புகைப்படமெடுக்கும்வாய்ப்புஅல்போன்ஸ்ராய்க்குக்கூடகிடைத்ததில்லையே. ஒருதேர்ந்தகவிஞனாகஇருந்திருந்தால், மொட்டைமாடிக்குப்புலிவந்தகாரணத்தைக்கண்டுபிடித்திருக்கலாம். ஒருபெருநகரக்குடியிருப்புக்குநடுவேமொட்டைமாடியில்உட்கார்ந்திருக்கும்புலிக்கும்வெறுமைஎன்னும்மாபெரும்உணர்வுக்கும்முடிச்சுபோட்டுஏதேனும்எழுதியிருக்கலாம். துரதிர்ஷ்டவசமாகநான்கவிஞனும்இல்லை. கால்வினும்அவனுக்குமட்டுமேநிஜப்புலியாகக்காட்சியளிக்கும்ஹாப்ஸும்நினைவுக்குவந்தார்கள். பஞ்சுஅடைத்தபுலிபொம்மையைவைத்துக்கொண்டுஒருகாமிக்ஸ்தொடரைஉருவாக்கிஉலகம்முழுதும்குழந்தைகளோடு, பெற்றோர்களையும்சேர்த்துக்கட்டிப்போட்டபில்வாட்டர்சன்மேல்பெரும்பொறாமைஏற்பட்டது. நான்எழுத்தாளனும்இல்லை. ‘அப்போநீயாருடா?’ என்றதுஎன்னைக்கலாய்க்கவேஎன்னோடுபிறந்தமனசாட்சி.

மொட்டைமாடிபுலியைஎன்னால்மறக்கவேமுடியாது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: