போடி இவளே!

…..
விளையாட்டாகச் சொன்னால் சிரிக்கிறது. சீரியஸாகச் சொன்னால் முறைக்கிறது. காதல்.
…….
அவளுக்கு ப்ரியம் என்றால் பிடிக்கும். அவனுக்குக் காதல் என்றால் பிடிக்கும். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும்.
……
வனத்தில் நானும் நீயும் அலைகிறோம். ஆப்பிள் அப்படியே இருக்கிறது.
…..
மனம் உன்னோடு நடக்கிறது. கால்கள் என்னோடு நடக்கிறது.
……
அவளுக்குப் பெரிய அழகின்னு நினைப்பு. அவள் நினைப்பதை விடவும் அவள் பெரிய அழகி.
…….
என் காதலின் சின்னம் ஸ்மைலி.
….
இன்பத்துக்கும் துன்பத்துக்கும் நடுவில் என்னை வைத்திருக்கிறாய். நினைத்த நேரத்தில் சென்றுவர வசதியாக.
…..
போடி இவளே என திட்டு வாங்கும் பெண்களிடம் அவளைப் பார்க்கலாம்.
…..
ஆணவம் அடங்க காதலிக்க வேண்டும். காதலில் கிட்டும் ஆணவம் உணர வேண்டும்.
….
அவ சொன்னாளாம். இவன் கேட்டானாம்.
…..
அவள் முதல்வர் ஆனால், ‘என்னைச் சுற்றியடிக்கும் சுடோகுவே’ என அவன் ஹோர்டிங் வைப்பான்.
…..
உனக்கும் சேர்த்தும் ஒரு தேனீர் அருந்துகிறேன். உனக்கும் சேர்த்து ஒரு மலையைப் பார்க்கிறேன். உனக்கும் சேர்த்து இந்த மழையில் நனைகிறேன்.
…….
ஒரு காதல் சட்டையை டக் இன் பண்ண வைக்கிறது. ஒரு காதல் அளவாகச் சிரிக்க வைக்கிறது. ஒரு காதல் நாசூக்காகப் பொய் பேச வைக்கிறது. ஒரு காதல் ஒரு காலர் ட்யூனுக்காக மெனக்கெட வைக்கிறது. ஒரு காதல் பண்டிகைகளை மறக்க வைக்கிறது. ஒரு காதல் நெருங்கிய நண்பனிடம் அழ வைக்கிறது. ஒரு காதல் குத்திய பச்சையை அழிக்க வைக்கிறது. ஒரு காதல் தனது மனைவியையும் குழந்தையையும் புதிய புன்னகையுடன் அறிமுகப்படுத்த வைக்கிறது. ஒரு காதல் நள்ளிரவில் எஃப்.எம் ஸ்டேஷன்களைத் துரத்த வைக்கிறது. ஒரு காதல் உறக்கத்தைப் பறித்துவிட்டு செல்கிறது. ஒரு காதல் கடைசிவரை காதலாகவே இருக்கிறது.
……
’நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பல. அரசியல் நடத்துறியா அராஜகம் பண்றியா? இரக்கம் இல்லையா உனக்கு? வேணாம் இத்தோட நிறுத்திக்குவோம். அடிதடி அரசியல் எங்களுக்கும் தெரியும்?’-வட்டச் செயலாளர் வண்டு முருகனின் சீற்றமும் ‘சூப் பாய்ஸ்’களின் குமுறலும் ஒரே புள்ளியில் இணைவதைக் கவனித்தீர்களா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: