எச்சில்

சளித்தொல்லை நாட்களில்

குட்டி யானை ஒன்றின் பிளிறலோடு

பொது இடங்களில் மூக்கு சிந்துவதில் நான் நிபுணன்.

குடும்ப விழாக்களில் வெற்றிலை எடுத்து

சுண்ணாம்பை விகிதம் தெரியாமல் கலந்து

வாய் ரணமானதை மறைத்தபடியே மென்று

இந்திப்படங்களில் வருகிற தாதாக்களின்

மிடுக்கோடு துப்புவேன்.

சில சமயங்களில் சங்கீத வித்துவான்களின் நளினத்தோடு துப்புவதும் உண்டு.

ஹான்ஸை உருட்டி நாக்கின் அடியில்

மின்னல் பொழுதில் வைத்துவிடும் நண்பனை வியந்து

ஒரு சிட்டிகை வாங்கி நானும் வாயில் போட்டு

கசப்பு தாளாமல் வழியெல்லாம் காறித் துப்பியிருக்கிறேன்.

பைக்கின் வேகத்தைக் குறைக்காமல் துப்பி

என் பின்னால் வருபவர்களைப் பதற வைப்பேன்.

சாலையின் நடுச்சுவர்களிலும் அதன் மீது வளர்க்கப்படும் செடிகளிலும்,

திரையரங்குகளிலும் ரயில் கழிப்பறைகளிலும்

நீங்கள் பார்த்து முகம்சுளிக்கும்

எச்சில் கறைகளில் என் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்

வானை நோக்கித் துப்புவதாக நினைத்து

என் மீது நானே துப்பிக்கொண்ட சம்பவங்களும் உண்டு.

அக வாழ்விலும் புற வாழ்விலுமாக எல்லா விதங்களிலும் துப்பியாச்சு.

வெளியேற திராணி இல்லாமல்

இன்னும் என் தொண்டையிலேயே நிற்கிறது,

பாதகம் செய்பவரின் முகத்தில் உமிழும்படி

பாரதி சொன்ன எச்சில் மட்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: