ஆரஞ்சுக்குறிப்பு

மழை மேகங்களால் வானம் இருண்டு கிடந்தது. மாலை நான்கு மணி இருக்கும். முந்தைய நாளின் சிறு மழை மனசே இல்லாமல் பூமியை நனைத்துவிட்டுப் போயிருந்தது. கிழக்கு முகப்பேர் நிறம் மங்கியிருந்தது. பழைய கறுப்பு வெள்ளைப் புகைப்படம் போல. நெற்குன்றம் சாலைக்கும் முகப்பேருக்கும் நடுவே ஓடும் கூவம் ஆற்றை ஒட்டி நின்றுகொண்டிருந்தேன். கண்ணைப் பறிக்கும் நிறங்கள் எல்லாமே திடீரென உலகத்தில் எடுபடாமல் போய்விட்டது போலிருந்தது. சிவப்புக் கட்டம் போட்ட சட்டைக் காரர், பச்சை நிற மாருதி கார், நீல நிற புடவை அணிந்த ஒரு பெண் இப்படி சிலர் என்னைக் கடந்து போனார்கள். அவர்களின் நிறங்கள் கறுத்த மேகங்களுக்கு முன்னால் தோற்றுப்போனது போல ஒரு தோற்றம். டாஸ்மாக் கடை, பழைய பேப்பர் வாங்கும் கடை, தூசி கிளம்பும் சாலை என மொத்த சூழலும் ‘வி வாண்ட் சம்திங் கலர்ஃபுல்’ என்று சொன்னது. எங்கிருந்துதான் வந்தானோ அந்தப் பழ வியாபாரி? கடகடவென தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டுவந்தவன் ஒரு இடத்தில் நிறுத்தினான். கூடையிலிருந்து ஆரஞ்சுப்பழங்களை எடுத்து வண்டி மீது குவிக்கத் தொடங்கினான். ஒன்று, இரண்டு, மூன்று….வண்டியைச் சுற்றி ஒளி கூடியது. அத்தனையும் பெயருக்கு ஏற்ற மாதிரி அவ்வளவு துல்லியமான ஆரஞ்சு நிறம். அங்கே நிறமிழந்துபோன மொத்த பொருட்களுக்கும் சேர்த்து..ஆரஞ்சுகள் கண்ணைப் பறித்தன. அவன் கூவிக் கூவி விற்றுக்கொண்டிருக்கிறான், பழுப்பேறிய ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தைத் தான் அழகாகக் கலைத்துப்போட்டதை உணராமல். கனியே, விழியே, பித்தேறிய மனமே…உங்களை எப்படி பாடுவேன்?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: