கருணை மழை

மழையில் நனைந்து வந்தவனைச் சட்டென்று அணைத்துக்கொள்ள அவளுக்கு என்றைக்கும் தோன்றியதில்லை. மழையே அணைத்தபிறகு வேறென்ன வேண்டும்?

….

பாவமன்னிப்பு கேட்க விரும்புபவர்களுக்கு மழை சிறந்த பாதிரியார்.

….

வருடக்கணக்கில் வறண்டுகிடக்கும் ஊரில் மழை வேண்டி ஒரு பிரார்த்தனைக்கூட்டம் நடக்கும். மொத்த ஊரும் திரண்டிருக்கும். ஒரே ஒரு குழந்தை மட்டும் கூட்டத்துக்குக் குடையுடன் வந்திருக்கும். அவளுக்காகவே மழை பெய்வதாகக் கதை நிறைவுபெறும். ஒவ்வொரு மழையிலும் அந்தக் குடைக்குழந்தை நினைவுக்கு வந்துவிடுகிறாள்.

….

எல்லோரும் அவனை அந்நியன் போல் பார்க்கிறார்கள். அவன் மழையில் நனைந்தபடி வீடு திரும்புகிறான்.

….

நான், நீ, குழந்தை, நாய்க்குட்டி, மண்புழு அனைத்துமே பெருமழையின் சிறுதுளிகள்.

எனக்காக உண்கிறேன். எனக்காக உடுத்துகிறேன். எனக்காகப் பேசுகிறேன். எனக்காக வாழ்கிறேன். இந்த மழையின் ஒரு பொட்டுத் தூறலுக்குக் கூட நான் சமானம் கிடையாது. எனினும் மழையில் நனைகிறேன்.

….

மழை கொஞ்சம் ஓய்வு விட்டிருந்த பின்மதியம். மரத்தடியில் உதிர்ந்துகிடக்கும் மஞ்சள் பூக்கள் சகிதம் டீக்கடையைப் பார்க்கவே ஆசுவாசமாக இருந்தது. ஒரு பெரியவர் வந்தார். ‘என்னப்பா…எப்படிருக்கே?’ அதிகாரமாகத்தான் கேட்டார். ‘உங்க புண்ணியத்துல நல்லாருக்கேன்’ என்று டீக்கடைக்காரர் சொல்ல, பெரியவர் திருத்தினார், ‘ம்ஹூம்..மழையால நல்லாருக்கேன்னு சொல்லு!’

….

இரவு முழுக்க மழையை வெறித்தபடி நிற்கும் அவர்களிடம் கதகதப்பு தேடி ஒதுங்கும் ஒரு சிறு நாய்.

…..

‘என்னய்யா ரோடு போட்டுருக்கீங்க—மாதிரி?’ என்று கோப்புகளை அவர்களின் முகத்தில் வீசியடித்தது மழை.

….

பழைய படங்களில் குடை சகிதம் வந்த டீச்சர்கள் ஒருமுறையேனும் மழையை எதிர்கொண்டதாகத் தெரியவில்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: