வலி புரிகிறதா?

‘இப்படி ஒரு சம்பவம் நடந்தவுடனே பா.ஜ.கவை தொடர்புப்படுத்துவதா?’ என்று ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி அலுவலகம் மீதான வெடிகுண்டு தாக்குதலுக்கு தமிழிசை சௌந்தர ராஜன் கருத்து கூறியிருக்கிறார். இதே கேள்வியைத்தானே இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு இஸ்லாமியர் மனமும் கெஞ்சாத குறையாக நம்மைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இந்தக் கேள்வி தமிழிசைக்கு ஒருவித எரிச்சலை மட்டுமே கொடுக்க முடியும். ’இல்லை’ என்ற ஒரே பதிலைப் பல ஊடகங்களுக்குப் பொறுமையாகச் சொல்ல வேண்டியிருக்கும். வேறு எந்த இழப்புகளும் இல்லை. ஆனால் எங்கேயோ யாராலோ நடக்கும் குண்டுவெடிப்புகளோடு அர்த்தமே இல்லாமல் தொடர்புப்படுத்தப்பட்ட, தொடர்புப்படுத்தப்படுகிற இஸ்லாமியர்கள் எத்தனை எத்தனை பேர்? அவர்களுக்கு அது எவ்வளவு பெரிய நெருக்கடி?

இப்படி காவல்துறையின் சந்தேகத்துக்குள்ளாகும் இஸ்லாமியர் திடீரென கைது செய்யப்படுவார். ‘மிக ஆபத்தான பயங்கரவாதி சிக்கிவிட்டான்’ என்பதுபோல நாட்டில் பெரும்பாலானவர்கள் அந்தக் கைது நடவடிக்கையை ஆதரிப்பார்கள். அவர் அடுத்த ஒரு வருடத்துக்காவது சிறைக்குள் இருக்க வேண்டும். வாடகை வீட்டில் வசிப்பவராக இருப்பின், அங்கிருந்து அவருடைய குடும்பத்தினர் துரத்தியடிக்கப்படுவார்கள். அவரது வேலை பறிபோகும். சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள். சுருக்கமாகச் சொன்னால், அவர்கள் சீரழிய வேண்டியிருக்கும். ‘குண்டுவெடிப்புக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என காவல்துறை ஒருவழியாக உண்மையை ’ரொம்ப’ கஷ்டப்பட்டு கண்டுபிடித்து சொல்லும்போது அந்த இஸ்லாமியரின் வாழ்க்கையே சிதறடிக்கப்பட்டிருக்கும்.

இத்தனைக்கும் பா.ஜ.கவுக்கும் தொலைக்காட்சி அலுவலத்திற்குள் குண்டு வீசிய இந்து இளைஞர் சேனா அமைப்புக்கும் கருத்தியல் ரீதியாக பெரிய வேறுபாடு எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. தாலி பற்றி, ’இந்தியாவின் மகள்’கள் பற்றி, காதலர் தினம் பற்றி எல்லாம் தமிழிசைக்கும் ’டிபன் பாக்ஸ் பட்டாசு’ ஜெயம் பாண்டியனுக்கும் ஒரே மதிப்பீடுகள்தான் இருக்கக் கூடும். இத்தகைய அமைப்புகள் பா.ஜ.கவின் கொள்கை வாரிசுகள் என்றால்கூட மிகை இல்லை. இப்படி ஒரு சம்பவத்துக்கு டிபன் பாக்ஸ் கும்பலோடு கூட சேர்ந்து திட்டு வாங்கும் நிலைமையில் தான் பா.ஜ.க இருக்கிறது. மத்தியில் நம் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் சேர்ந்துதான் குண்டு வைக்கும் துணிச்சலை இத்தகைய உதிரிகளுக்குக் கொடுத்திருக்கிறது. முழு பூசணிக்காய் போல கனக்கும் இந்த யதார்த்தங்களை எல்லாம் வசதியாக மறந்துவிட்டு, ‘குண்டுவெடிப்போடு எப்படி எங்களைக் கோத்துவிடுகிறீர்கள் ’ என்று குமுறும் தமிழிசை சௌந்தர ராஜனைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. குண்டு வைத்ததற்கு ஜெயம் பாண்டியன் கும்பல் முந்திக்கொண்டு பொறுப்பேற்காவிட்டால், தமிழிசை தனக்கே உரிய பாணியில், ‘நான் ஒத்துக்கவே மாட்டேன்’ என்று மொத்த இந்துத்துவா கூடாரத்துக்கும் சேர்த்து மறுத்துக்கொண்டிருந்திருப்பார் போல.

‘உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா?’ என்ற மானுட தத்துவம்தான் நினைவுக்கு வருகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: