அஷ்ட கோணல்

மகள் அஷ்ட கோணலாக உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவளை மெதுவாகத் தூக்கி மீண்டும் படுக்கையில் வைக்கிறேன். கோணலிலிருந்து விடுபட்ட மகளின் உறக்கம் தடையின்றி தொடர்கிறது. எனக்குள் எழுந்த ரீங்காரம் இன்னும் நிற்கவில்லை. அந்த அஷ்ட கோணல் என் இன்றைய நாட்களைச் சொல்வதாகவும் இருக்கிறதா?

….
எல்லோரும் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட வீட்டுக்குள் அவன் நுழைகிறான். ஒரு தேர்ந்த திருடன் போல அவன் இரவுகளில் சத்தங்களைத் தவிர்க்கப் பழகியிருந்தான். உறங்கிக்கொண்டிருக்கிற மகளும் மகளும் நிழல் உருவங்களாகத் தெரிந்தார்கள். கூரை மின்விசிறியின் சத்தம் மட்டும் கேட்டது. முதலில் பையை வைத்துவிட்டு சில நொடி சோபாவில் இளைப்பாறுவது அவன் வழக்கம். சோபாவில் சாய்ந்த அவனுக்குக் கேட்டது கிசுகிசுப்பான ஒரு குரல், ‘டாடி….!’ ஆசிர்வதிப்பதற்காக தலையில் இறங்கும் யானையின் துதிக்கை போல அந்த நிமிடம் அவனுக்கு அவ்வளவு கனமாக இருந்தது.
…..

ரைட்டர் பேயோனின் வார்த்தையில் சொன்னால் அது ஒரு ’நல்லிரவு’. போக்குவரத்து அருகிவிட்ட சாலையில் அவன் வீடு திரும்பிக்கொண்டிருக்கிறான். சட்டைப்பையில் போட்டு வைத்த செல்போன் ஒலிக்கிறது. வீட்டில் இருக்கும் மகள் அழைக்கிறாள். பைக்கை நிறுத்திவிட்டு அழைப்பை ஏற்றுக்கொள்கிறான். தயிர் பாக்கெட்டும் கொஞ்சம் தக்காளியும் வாங்கி வர வேண்டும் என்று அம்மாவின் குரலை ஒலிக்கிறாள் மகள். ’எங்கே வந்துட்டிருக்கீங்க டாடி? வட பழனியா, கோயம்பேடா…’ என்று அதே அம்மாவின் தொடர்ச்சியாக விவரம் கேட்க அவனுக்குச் சிரிப்பு வருகிறது. திடீர் யோசனையில் போனை லவ்ட் ஸ்பீக்கரில் போட்டு சட்டைப்பைக்குள் வைக்கிறான். சட்டைப்பைக்குள் அமர்ந்துகொண்ட மகளோடு பேசிக்கொண்டே அவனது பயணம் தொடர்கிறது.
…..
கைவிடப்பட்ட ஒரு நாளின் முடிவில் அவன் வீட்டுக்குள் நுழைந்தான். அவன் கால்கள் உறங்கும் மகளிடம் போய் நின்றன. அவளது உறக்கத்தைக் கண்ணாடிபோல பாவித்துக்கொண்டு தூக்கி தோளில் சாய்த்துக்கொண்டான். அவள் சிறுநீர் கழிப்பதற்காகக் கழிப்பறையை நோக்கி நடக்கிறான். அவன் கைகள் என்றைக்கும் விட அழுத்தமாக அவளைப் பற்றிக்கொண்டிருந்தன. அவன் கைவிடப்பட்ட ஒரு நாளை இப்படியாக மாற்றிக்கொண்டான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: