அறிமுகம்

என் பெயர் ஆனந்த். அப்பாவின் பெயர் செல்லையா. ஆனந்த் செல்லையா என்ற பெயரில் எழுதி வருகிறேன்.

திரைப்படத்துறை மீதான ஆர்வத்தில் பத்திரிகைத்துறைக்கு வந்து சேர்ந்தவர்களில் நானும் ஒருவன். அண்ணன்கள் இருவருமே பத்திரிகைத்துறையில் இயங்கிக்கொண்டிருந்தது முக்கியக் காரணம்.

இதழியல் என்பது சுவாரஸ்யம் கோரும் வாசிப்புக்கான வடிகால் என்பதாக மட்டுமே தொடக்கத்தில் நினைத்திருந்தேன். சுவாரஸ்யத்தோடு, தன்னையே தேடும் செயலும் தொடர்புடையது என்பதைச் சில நல்ல நண்பர்கள் உணர்த்தினார்கள். அதே வழியில் எழுதவும் அவர்கள் உதவினார்கள்.  இன்று ஒரு பத்திரிகையாளராக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் எனக்கு இருக்கிறது. பெரிதாக எதுவும் எழுதாவிட்டாலும், பத்திரிகையாளர் வட்டத்தில் ஒரு சிறிய கவனம் என் கட்டுரைகளுக்குக் கிடைத்திருக்கிறது.

திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற என் கனவு எனக்குள்ளேயே பத்திரமாக இருக்கிறது. நண்பர்கள் ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான திரைப்படங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை அருகிலிருந்து கவனிக்கிற, கற்றுக்கொள்கிற வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. திரைப்படம் எடுப்பேனோ இல்லையோ, ஏதேனும் ஒரு வகையில் ஊடகத்துறையிலேயே இருப்பதுதான் என் விருப்பம்.

எனது சொந்த ஊர் நாகர்கோவில். படித்தது, வளர்ந்தது எல்லாம் கோவில்பட்டி அருகில் உள்ள கயத்தாறில்.  சமூகம்,  அரசியல், கல்வி, கானுயிர், சூழியல், குழந்தைகள் நலன் ஆகியவை எனக்குப் பிடித்த களங்கள்.

உலகத்தமிழ்.காம், காலச்சுவடு,  விஜய் டிவியில் ஒளிபரப்பான குற்றம் நடந்தது என்ன? , காத்துகருப்பு, தினமலர், குமுதம் ஆகியவற்றில் பணிபுரிந்துள்ளேன்.

என் மனைவியின் பெயர் தங்கம் சிவப்ரியா. என் மகள் ஆதிரா.

பத்திரிகை வேலைகளைத் தாண்டி ஏதேனும் எழுதும் ஆர்வத்தில்  இரு வருடங்களுக்கு முன்னால் நண்பன் சந்தோஷின் உதவியோடு இந்த வலைத்தளத்தைத் தொடங்கினேன். முகநூலில் அவ்வப்போது எழுதி வரும் சின்னச் சின்ன குறிப்புகளையும் முன்பு எழுதி வைத்திருந்ததையுமே இதில் தற்போதைக்குக் கொடுத்து வருகிறேன்.

Advertisements

2 Comments (+add yours?)

 1. jeevansubbu
  Nov 11, 2013 @ 13:25:59

  சுருக் நறுக்குன்னு நீங்கள் எழுதுவது ரெம்பப்பிடிச்சிருக்குங்க . சின்ன சின்ன பத்திகளில் பெரிய பெரிய விசயங்களை வெகு அழகாக எழுதிவருகின்றீர்கள் . தொடர்ந்து பதிவிடவும் .
  jeevansubbu.blogspot.com

  Reply

 2. ஆனந்த் செல்லையா
  Nov 12, 2013 @ 09:09:14

  எனது வலைத்தளத்தைக் கவனித்ததற்கு மிக்க நன்றி ஜீவன்சுப்பு.

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: